புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற செங்கழுநீரம்மன் கோயில் ஆடி தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து விழாவை துவக்கி வைத்தனர்.
புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினத்தில் புகழ்பெற்ற அருள்மிகு செங்கழுநீரம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்தாண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா நாட்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.மேலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் செய்யப்பட்டு தீபாதரனைகளும் காண்பிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் இன்று கோலாகலமாக அரங்கேறியது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிச, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தினை துவக்கி வைத்தனர்.
தேரோட்டத்தை காண புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.கோயில் தேரோட்டத்தையொட்டி பாதுகாப்பு பணிகளுக்காக சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசாரும்,20க்கும் மேற்பட்ட உயர்ரக சிசிடிவி கேமராக்களும் பயனடுத்தப்பட்டனர்.கோயில் திருவிழாவை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
வேந்தன்