புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் நாளை முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்து இருந்தார்.  பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்…

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் நாளை முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்து இருந்தார்.  பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கான நடவடிக்கைகளை நிர்வாகம் எடுத்து வந்தது.
இதனிடையே தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், புதுச்சேரியிலும் திறக்கக் கூடாது என பெற்றோர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து ஆலோசனை நடத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,  “பள்ளிகள் மற்றும் கல்லூரிக்ள் திறக்க வேண்டாம் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து முதலமைச்சர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தப்பட்டது.  புதுச்சேரி மாநிலத்தில் முழுவதுமாக கொரோனா தொற்று குறையாத நிலையில் தற்போது பள்ளிகள் திறக்கும் சூழ்நிலை இல்லை என்றும் மேலும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாது”  என தெரிவித்தார்.
மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி பின்னர் அறிவிக்கப்படும் என்ற அமைச்சர் நமச்சிவாயம், நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கை முடிவுக்கு ஏற்றார் போல புதுச்சேரி அரசு முடிவு எடுக்கும் என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.