தொழிலாளிகளை முதலாளிகளாக மாற்ற மக்கள் நீதி மய்யத்தால்தான் முடியும் என கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தொழிற்சங்க பேரவை தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொழிற்சங்க பேரவையை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். இதன் பின்னர், தொழிற்சங்க பேரவையின் தலைவர் பொன்னுசாமிக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
தொடர்ந்து, ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், தொழிலாளிகளை முதலாளிகளாக மாற்ற மக்கள் நீதி மய்யத்தால்தான் முடியும் என தெரிவித்தார்.
மேலும், கண்ணதாசன் கவிதை, கலைஞர் வசனம் புரிந்த ஊரில் நான் பேசும் தமிழ் தமிழர்களுக்கு புரியாதா என்று கேள்வி எழுப்பிய கமல்ஹாசன், நான் பேசும் தமிழ் புரிந்தால் தமிழ வாழும் என்றும் கூறினார்.







