புதுச்சேரியில் பாமக தனித்துப் போட்டி!

தேசிய ஜனநாயக கூட்டணி பாமகவுக்கு இடம் ஒதுக்க பாஜக முன் வராததால் பாமக தனித்து போட்டியிடுவதாக தற்போது அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் வரும் ஏப்ரல் 6ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலையொட்டி தமிழகத்தில்…

தேசிய ஜனநாயக கூட்டணி பாமகவுக்கு இடம் ஒதுக்க பாஜக முன் வராததால் பாமக தனித்து போட்டியிடுவதாக தற்போது அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் வரும் ஏப்ரல் 6ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலையொட்டி தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது. இந்நிலையில் புதுவையில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

புதுவையில் முதற்கட்டமாக 5 தொகுதிகளின் வேட்பாளர்கள் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்வதாகவும்,

தொடர்ந்து அடுத்த கட்ட வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்றும்
புதுச்சேரி பாமக அமைப்பாளர் தன்ராஜ் தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். பாமகவை பாஜக புறக்கணித்து வருவதால் வரும் 19ம் தேதிக்குள் பாமகவிற்கு தொகுதி ஒதுக்கினால் வேட்பு மனுக்களை திரும்பப்பெறுவோம், இல்லையென்றால் போட்டியிடுவோம் என்றும் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.