28.6 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புதுச்சேரி அமைச்சரவை பங்கீடு: முடிவுக்கு வந்தது 50 நாள் இழுபறி!

புதுச்சேரி அமைச்சரவை பங்கீட்டில், 50 நாட்களுக்கு மேலாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலில் பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதையடுத்து முதலைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவியேற்றார். ஆனால், அமைச்சரவை பங்கீட்டில் பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட இழுபறியால் தேர்தல் முடிவு வெளியாகி, 50 நாட்களாகியும் அமைச்சரவை பதவியேற்காத நிலை உருவானது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், இரு கட்சிக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை நேரில் சந்தித்து அமைச்சரவை பட்டியலை முதலமைச்சர் ரங்கசாமி அளித்தார். அந்தப் பட்டியலில் பாஜகவிற்கு 2 அமைச்சர்களும், என்.ஆர்.காங்கிரசுக்கு 3 அமைச்சர்களும் வழங்க முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தொடர்ந்து, துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு பிறகு நாளை அமைச்சர்களின் பதவியேற்பு விழா நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading