தேசிய நெடுஞ்சாலையில் நிழல் கூடம் இல்லாததால் பொதுமக்கள் அவதி!

தேசிய நெடுஞ்சாலையில் நிழல் கூடம் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.   திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில், பெங்களூர் சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நிழல் கூடம் இல்லாததால்,  பொதுமக்கள் ஆபத்தை உணராமல்…

தேசிய நெடுஞ்சாலையில் நிழல் கூடம் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.  

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில், பெங்களூர் சென்னை செல்லும்
தேசிய நெடுஞ்சாலையில் நிழல் கூடம் இல்லாததால்,  பொதுமக்கள் ஆபத்தை உணராமல் மேம்பாலத்தின் மீது அமர்ந்து பேருந்திற்காக காத்திருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்: கொரோனா தொற்றுக்குப் பின் இணை நோய்கள் அதிகரிப்பு – பொது சுகாதாரத் துறை இயக்குநர்!

இதேபோல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்திலும் நிழல் கூடம்
இல்லாததால் பொதுமக்கள் நீண்ட நேரம் வெட்ட வெளியில் காத்திருக்கும் அவல நிலை
ஏற்பட்டுள்ளது.   இந்த இடங்களில் உடனடியாக நிழல் கூடம் அமைக்கப்பட வேண்டும்
என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.