பிஸ்பிபி பள்ளியில் மற்றொரு ஆசிரியர் கைது!

பத்மா சேஷாத்திரி மில்லினியம் பள்ளியின் தற்காப்பு கலை பயிற்சியாளர் மீது முன்னாள் மாணவி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் அவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை…

பத்மா சேஷாத்திரி மில்லினியம் பள்ளியின் தற்காப்பு கலை பயிற்சியாளர் மீது முன்னாள் மாணவி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் அவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அண்ணாநகரில் தற்காப்புக் கலை பயிற்சி நடத்தி வரும் கெபிராஜ், கெருகம்பாக்கத்தில் உள்ள பத்மா சேஷாத்ரி மில்லியனியம் பள்ளியில் பகுதிநேர தற்காப்பு பயிற்சியாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது தற்காப்பு கலை பயிற்சி பெற வந்த மாணவியிடம் கெபிராஜ் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், போட்டிகளுக்காக வெளியூர்களுக்கு மாணவியை அழைத்துச் செல்லும் போதும் கெபிராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இந்த விவகாரத்தை வெளியே சொல்லக் கூடாது என மாணவிக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் காவல்நிலைய போலீசார், பெண் வன்கொடுமை சட்டம், பாலியல் துன்புறுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கெபிராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.