எம்பி சு.வெங்கடேசன் முதல்வரிடம் கோரிக்கை!

தமிழகத்தில் இறப்பு நிகழ்ந்த 21 நாட்களுக்கு பதிய தவறினால் அபராதம் செலுத்தவேண்டும் என்ற விதியை முதல்வர் தலையிட்டு மாற்றம் செய்யவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது…

தமிழகத்தில் இறப்பு நிகழ்ந்த 21 நாட்களுக்கு பதிய தவறினால் அபராதம் செலுத்தவேண்டும் என்ற விதியை முதல்வர் தலையிட்டு மாற்றம் செய்யவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்க பதிவில், “தமிழகத்தில் இறப்பு நிகழ்ந்த 21 நாட்களுக்கு பதிவு செய்யவேண்டும் என்றும் தவறினால் அபராதம் செலுத்த வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.

தமிழகத்தில் பேரிடர் காலத்தில் இறப்புகள் அதிகரித்திருப்பதாகவும் அரசு அலுவலகங்களோ மிகக் குறைந்த ஊழியர்களோடு இயங்குவதாகவும் தெரிவத்துள்ளார்.

இறந்தவர்களைப் விவரங்களை பதிய வாழ்கிறவர்கள் படாதபாடு படுகிறார்கள் என்றும் அபராதத் தொகையைவிட கொடியது மண்டல அலுவலகத்துக்கும் வார்டு அலுவலகத்துக்குமான அலைச்சல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மரணங்களை சந்தித்துள்ள வீடுகளில் உலராத கண்ணீரோடு மனிதர்கள் தேங்கிக்கிடப்பதாகவும் இறப்புச் சான்றிதழுக்காக அழுத கண்ணீரோடு மக்களை அலையவிட வேண்டாம்.

எளிய மக்களின் இடரைக் குறைக்க, முதலமைச்சர் தலையிட்டு, அபராதம் செலுத்த வேண்டும் என்ற விதியை திருத்தம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.