அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்துப் பேசினார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் சிலருடன் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்றி நடைபெற்ற இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “சசிகலாவின் தொலைபேசி உரையாடலை வைத்து அதிமுகவில் யாரும் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது.
இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் சமீபத்தில் காலமான நிலையில், ஆறுதல் சொல்லும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.







