பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை…

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்குவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டதை சுட்டிக்காட்டி உள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தலைவர் மற்றும் செயல் இயக்குநர் நியமிக்கப்பட்டு சில குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான நிலம் ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்ட நிலையில், அந்த இடத்தில் மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்திற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை எனக் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டுமென்றும், இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கு பணிகளைச் செயல்படுத்துவதற்கான முழு அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டுமென்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.