ராணுவ வீரர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக சார்பில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட 3000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட ராணுவ வீரர் பிரவு அடித்து கொல்லப்பட்ட விவாகரம், பாஜக பட்டியல் அணி தலைவர் தடா. பெரியசாமி இல்லம் மற்றும் கார் மீது நடைபெற்ற தாக்குதலை கண்டித்து தமிழக பாஜக சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்திய பேரணி நடைபெற்றது.
அண்ணா சாலை & சுவாமி சிவானந்த சாலை சந்திப்பில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே நேற்று மாலை பாஜக சார்பில் அதன் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் இந்த பேரணி நடைபெற்றது. இந்த அனுமதியின்றி பேரணி நடத்தியதாக திருவல்லிக்கேணி போலீசார் மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சட்ட விரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கூட்டம்
சேர்த்தல், மாநகர காவல் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் திருவல்லிக்கேணி
போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, துணைத்தலைவர் கரு.நாகராஜன், பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட சுமார் 3000 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பேரணியை தொடர்ந்து ராணுவ வீரர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தார்.








