டெல்லியில் மாணவர்கள் நீட் குளறுபடிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு அரசியலைத் தாண்டி திரைபிரபலங்களும் ஆதரவு தந்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று சென்னையில் நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், லெனின் பாரதி, நடிகர்கள் சத்யராஜ், மன்சூர் அலிகான், கலையரசன், நடிகை ஆண்ட்ரியா, பாடகர் அறிவு, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் கலந்து கொண்டனர்.
மேலும் நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர்.




