கருப்பு திரைபப்டத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’.
வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ராதிகா, ரவீனா டண்டன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 14 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சித்தாரா எண்டர்டெய்ன்மன்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். அண்மையில் படத்தின் முதன் பாடலாக ‘பட்டாம்பூச்சி’ வெளியாகி இருந்தது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் 2-வது பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யாவின் குரலில் வெளியாகியுள்ள இந்த பாடலுக்கு கென் கருணாஸ் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.




