வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் வெளிநாட்டு சதி என வழக்கு; நீதிபதிகள் அதிருப்தி

டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் அந்நிய சக்தி ஊடுருவல், வெளிநாட்டு பின்புலம் உள்ளது குறித்து என்.ஐ.ஏ. விசாரணை நடந்த வேண்டும் என்று கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மத்திய அரசு கொண்டு கடந்த…

டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் அந்நிய சக்தி ஊடுருவல், வெளிநாட்டு பின்புலம் உள்ளது குறித்து என்.ஐ.ஏ. விசாரணை நடந்த வேண்டும் என்று கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மத்திய அரசு கொண்டு கடந்த 2020ம் ஆண்டு 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதனை வாபஸ் பெறக்கோரி, டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். ஒரு வருடத்துக்கும் மேலாக நடந்த இந்தப் போராட்டத்தை அடுத்து, அந்த சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்நிலையில் டெல்லியில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வெளிநாடுகளின் சதி மற்றும் அந்நிய நாடுகளின் பணம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தயவுசெய்து நீதித்துறையின் செயல்பாடுகளை மதியுங்கள் என அதிருப்தி தெரிவித்ததோடு, மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.