தூத்துக்குடியில் பலத்த சூறைக்காற்று; மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை

மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த சூறைகாற்று வீசுவதால் தூத்துக்குடி, மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.  தமிழக வளிமண்டல பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும், நீலகிரி,…

மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த சூறைகாற்று வீசுவதால் தூத்துக்குடி, மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

தமிழக வளிமண்டல பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும், நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மன்னார் வளைகுடா கடலில் வீசும் சூறைக்காற்றினால் தூத்துக்குடி, மீனவர்களுக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்ல தடை
விதிக்கப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்றானது 65 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால் தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் வாயிலில், மீன்பிடி துறைமுக அலுவலகம்
சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று
அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று 475 விசைப்படகுகள் மீன்பிடிக்க
செல்லவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.