மதிப்பெண், சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தது.
மதிப்பெண், சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படவில்லை எனத் தொடரப்பட்ட வழக்கில், தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் நிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அதில், 2021ஆம் ஆண்டு முதலே மதிப்பெண் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க முடியும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மதிப்பெண் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் பணியானது நடைபெற்று வருகிறது.
இதில், நீதிமன்ற உத்தரவுப்படி அனைவருக்கும் மதிப்பெண் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது சாத்தியமில்லை. ஆனால், மதிப்பெண் சீனியாரிட்டி கோரி வழக்குத் தொடர்ந்த 1996ஆம் ஆண்டு பிரிவினருக்கு மட்டும் மதிப்பெண் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வை கடைப்பிடிக்கிறோம். அதேவேளையில், TNPSC மதிப்பெண் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை 2021ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு பதவி உயர்வு வழங்குகிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








