காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு – தமிழ்நாடு அரசு உத்தரவு!

காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வை வழங்கி தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள் அறிக்கையில் கூறியிருப்பதாவது:  “சேலம் சரக காவல்துறை டிஐஜியாக உள்ள ராஜேஸ்வரி, வேலூர் சரக காவல்துறை டிஐஜி முத்துசாமி, காவல்துறை…

காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வை வழங்கி தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள் அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

“சேலம் சரக காவல்துறை டிஐஜியாக உள்ள ராஜேஸ்வரி, வேலூர் சரக காவல்துறை டிஐஜி முத்துசாமி, காவல்துறை நிர்வாகப்பிரிவு டிஐஜியாக உள்ள சாமுண்டீஸ்வரி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஐஜியாக உள்ள லட்சுமி, உளவுத்துறை டிஐஜியாக உள்ள ராஜேந்திரன், டிஐஜி ஜெயஸ்ரீ, டிஐஜி மயில்வாகணன் இந்த 7 டிஐஜிக்களுக்கு ஐஜி அந்தஸ்து வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதைப்போல, ஐஜியாக உள்ள ஆனந்த்குமார் சோமணி, தமிழ் சந்திரன் ஆகியோருக்கு ஏடிஜிபி அந்தஸ்து வழங்கியும் அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், முதலமைச்சர் பாதுகாப்பு பிரிவின் எஸ்பியாக உள்ள திருநாவுக்கரசு, மத்திய அரசு பணியில் உள்ள என்ஐஏ எஸ்பியாக உள்ள விக்ரமன், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு எஸ்பியாக உள்ள அரவிந்தன் உள்பட 10 எஸ்பிக்களுக்கு டிஐஜிக்களாக அந்தஸ்தை வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கான பணியிடங்களை தமிழ்நாடு அரசு விரைவில் அறிவிக்க உள்ளது.”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.