இந்த வெற்றிக்குப் பிறகு இப்போது ஃபஹத் பாசில் மற்றும் வடிவேலு ஆகிய இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 98 ஆவது படமாக இந்த படம் உருவாகி வருகிறது.
மீண்டும் இணையும் வடிவேலு, ஃபஹத் பாசில்…!
ஃபஹத் பாசில், வடிவேலு இணைந்து நடிக்கும் படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. மாமன்னன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றது. படத்தில் நடித்த வடிவேலு மற்றும்…
ஃபஹத் பாசில், வடிவேலு இணைந்து நடிக்கும் படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
மாமன்னன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றது. படத்தில் நடித்த வடிவேலு மற்றும் ஃபஹத் பாசில் ஆகிய இருவரின் நடிப்பும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.
இந்த படத்தை சுதீஷ் சங்கர் இயக்க உள்ளார். இவர் திலீப் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான வில்லாதி வீரன் என்ற திரைப்படத்தை இயக்கியவர். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு மேற்கொள்கிறார். புத்தாண்டை முன்னிட்டு இன்று இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.






