தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த மேலும் ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தலை நடத்த மேலும் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு தலைவர், 2 துணைத் தலைவர்கள், 2…

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தலை நடத்த மேலும் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு தலைவர், 2 துணைத் தலைவர்கள், 2 செயலாளர்கள், 1 பொருளாளர், 26 செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தநிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலின் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும், தேர்தல் நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நீதிமன்றமே நியமிக்க உத்தரவிடக் கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் கமல்குமார், சீனிவாசன், விடியல் ராஜ் உள்ளிட்ட 8 தயாரிப்பாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

செப்.18இல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு

இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், செயற்குழுவில் விவாதிக்காமல் தேர்தல் நடத்தும் அலுவலராக ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமனை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தனிச்சையாக நியமித்தது தவறு எனவும், நிர்வாகிகளின் இந்த அறிவிப்பை ரத்து செய்து நடுநிலையான ஒருவரை தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்க வேண்டுமெனவும் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதற்கு பிறகு எதிர் தரப்பு மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், செயற்குழுவில் விவாதிக்கப்பட்ட பிறகே தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டார் எனவும், இது தொடர்பாக வேறு ஏதேனும் பிரச்னை இருந்தால் தெரிவிக்கலாம் எனவும், தேர்தல் அலுவலர் நியமிக்கப்பட்டு விட்டதால் இந்த மனுவே காலாவதியாகி விட்டதாகவும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கடந்த ஜனவரி 13-ம் தேதி நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க கவுன்சில் செயற்குழுவில் விவாதிக்கப்பட்ட விவாகரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்திருந்தார்.

இதனையடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தேர்தல் நடத்தியது குறித்த அறிக்கையை ஏப்ரல் 3-வது வாரம் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தலுக்கு பாதுகாப்பு தேவைப்படும்பட்சத்தில் காவல்துறையை அணுகலாம் என தெரிவித்தார். மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தலை நடத்த கூடுதலாக ஓய்வு பெற்ற நீதிபதி வி.பார்த்திபனை நியமித்தும் உத்தரவிட்டார்.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.