புரோ ஹாக்கி லீக்: இந்தியா அபார வெற்றி

பெண்கள் புரோ ஹாக்கி லீக் போட்டியில், ஜெர்மனி அணியை 3 – 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. பெண்களுக்கான 3வது புரோ ஹாக்கி லீக் பல்வேறு…

பெண்கள் புரோ ஹாக்கி லீக் போட்டியில், ஜெர்மனி அணியை 3 – 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

பெண்களுக்கான 3வது புரோ ஹாக்கி லீக் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்திய அணி, ஜெர்மனியுடன் நேற்று மோதியது. ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நேற்று (சனிக்கிழமை) நடந்தது. ராணி ராம்பால் காயத்தில் இருப்பதால் இந்த ஆட்டத்தில் இந்திய அணியை சவிதா வழி நடத்தினார்.

பரபரப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இதையடுத்து வெற்றி தோல்வியை தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா தனது முதல் 3 வாய்ப்புகளையும் கோலாக மாற்றியது.

ஜெர்மனி அணி அனைத்து வாய்ப்புகளையும் இந்திய கோல் கீப்பர் சவிதா முறியடித்தார். முடிவில் இந்தியா 3-0 என்ற கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. முன்னதாக இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது லீக்கில் இதே போல் பெனால்டி ஷூட் அவுட்டில் ஜெர்மனி வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில் இந்தியா இதுவரை 6 போட்டியில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.