மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்: மு.க ஸ்டாலின்

திமுக மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக நிர்வாகி புழல் நாராயணனின் இல்லத் திருமணத்தை…

திமுக மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக நிர்வாகி புழல் நாராயணனின் இல்லத் திருமணத்தை நடத்தி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்களிடம் செல்; மக்களிடம் கற்றுக்கொள் என்ற அண்ணாவின் வழிகாட்டுதலை பின்பற்றி உள்ளாட்சி பிரதிநிதிகள் செயல்பட வேண்டும் என்றார்.

எதிர்க்கட்சியாக இருந்தபோதே மக்களுக்காக செயல்பட்ட இயக்கம் திமுக என்று குறிப்பிட்ட முதலமைச்சர், திமுக மீது மக்கள் வைத்த நம்பிக்கைதான் சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு காரணம் என்று கூறிய அவர், கொரோனாவை கட்டுப்படுத்தியதில் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.