செல்பி எடுப்பதற்கு மறுப்பு தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மற்றும் அவரது நண்பர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மற்றும் அவரது நண்பர் சாப்பிட சென்றுள்ளார். அப்போது இரண்டு ரசிகர்கள் பிருத்வி ஷாவுடன் புகைப்படம் எடுக்க விரும்பினர். அதற்கு பிருத்வி ஷா அனுமதி தந்த பிறகு புகைப்படங்கள் எடுத்தனர். ஆனாலும் கூடுதலாக புகைப்படங்கள் எடுக்க அவர்கள் முயன்றதாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதற்கு பிருத்வி ஷா மறுப்பு தெரிவித்தார். அதன்பிறகு தனது நண்பருடன் ஹோட்டல் மேலாளரை அழைத்து ரசிகர்களை வெளியேற்றும்படி கூறியிருக்கிறார். இதனால் அந்த இரண்டு ரசிகர்களும் வெளியேற்றப்பட்டனர். பின்பு பிருத்வி ஷா நண்பருடன் வெளியே வந்த போது அவரை சிலர் பேஸ்பால் மட்டைகளுடன் தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. பிருத்வி ஷாவின் சொகுசு காரில் உள்ள கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.
அண்மைச் செய்தி: துருக்கி நிலநடுக்கம் – 248 மணி நேரத்துக்குப் பிறகு சிறுமி உயிருடன் மீட்பு
அதன்பிறகு பிருத்வி ஷா வேறு காரில் சென்றுள்ளார். இதுதொடர்பாக பிருத்வி ஷா போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சப்னா கில் என்ற பெண் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.