முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

துருக்கி நிலநடுக்கம் – 248 மணி நேரத்துக்குப் பிறகு சிறுமி உயிருடன் மீட்பு

துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட 248 மணி நேரத்துக்குப் பிறகு 17 வயது சிறுமியை மீட்புக் குழுவினர் இன்று உயிருடன் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் மக்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. அதைத்தொடர்ந்து அதே நாளில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. பின்னர் இரவில் 3வது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6ஆக பதிவாகியது. அடுத்தடுத்த தொடர் நிலநடுக்கத்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  அடுக்குமாடி கட்டடங்கள் தரைமட்டமாயின.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதி, சிரியாவின் வடக்குப் பகுதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்து விட்டது.

மீட்பு பணிகள் தீவிரமாக தற்போது நடைபெற்று வருகின்றன. இதனிடையே நிலநடுக்கம் ஏற்பட்ட 248 மணி நேரத்துக்குப் பிறகு துருக்கியில் கஹ்ரமன்மராஸ் மாகாணத்தில்  அலினா என்ற 17 வயது சிறுமியை மீட்புக் குழுவினர் இன்று உயிருடன் மீட்டனர்.

அண்மைச் செய்தி: 1100-க்கும் மேற்பட்ட விமானங்களை வாங்கும் இந்திய விமான நிறுவனங்கள்

மீட்கப்பட்ட சிறுமி ஆரோக்கியத்துடன் இருந்ததாக மீட்பு பணியில் ஈடுபட்ட நிலக்கரி சுரங்க தொழிலாளி அக்டோகன் தெரிவித்தார். மேலும், இந்த கட்டடத்தில் ஒரு வாரமாக வேலை செய்து வருகிறோம். இடிபாடுகளில் இருந்து மனிதர்களில் சத்தம் கேட்கும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்தோம். உயிருடன் ஒருவரை பார்க்கும் போது நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று அக்டோகன் தெரிவித்தார். சிறுமியை உயிருடன் மீட்டதற்காக அவரது மாமா மீட்புக் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram