வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவுடனான நட்புறவை வளர்க்கும் விதமாக இரண்டாயிரத்து 600 கிலோ மாம்பழங்களை அனுப்பியுள்ளார்.
பிரமதர் மோடிக்கும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகிய இருவருக்கும் பெனாபோல் எல்லைப்பகுதி வழியாக வாகனத்தில் மாம்பழங்களை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வடமாநில முதலமைச்சர்களுக்கும் விரைவில் மாம்பழம் பார்சல்களை அனுப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.







