நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 39,796 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து 90 சதவிகிதம் அளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. அதுபோலவே, கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 39,796 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 3,05,85,229 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, 4,82,071 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் ஒரே நாளில் 42,352 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். மொத்தமாக இதுவரை 2,97,00,430 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 723 பேர் கொரொனாவால் உயிரிழந்துள்ளனர் எனவும், இதுவரையிலான மொத்த உயிரிழப்பு 4,02,728 என்றும், கடந்த 24 மணிநேரத்தில் 14,81,583 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன, இதுவரை மொத்தம் 35,28,92,046 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 15,22,504 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை நாட்டில், 41,97,77,457 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது எனவும் சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.







