மேகதாது திட்டம் இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கும் என கர்நாடக அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை திட்டத்தை எதிர்க்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பதில் கடிதம் அனுப்பினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில், நீர் மின் நிலையத்துடன் கூடிய மேகதாது அணையை, தமிழ்நாட்டில் உள்ள இரண்டு நீர் மின் நிலையங்களுடன் ஒப்பிடுவதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு, மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை இன்று அளித்த பேட்டியில், “மேகதாது திட்டம் இரண்டு மாநிலங்களுக்கும் பயனளிக்கும். கர்நாடகாவின் நீர் தேவைக்காகவே மேகதாது திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். கிருஷ்ண ராஜ சாஹரத்திற்குப் பிறகு எங்களுக்கு நீர் சேமிப்பு பகுதிகள் எதுவும் இல்லை. மழை பெய்யாத காலங்களில் இங்கு சேமித்துவைத்துள்ள நீரை பயன்படுத்துவோம்” என்று தெரிவித்தார்.
இப்போது தமிழ்நாட்டில் அமைந்துள்ள புதிய அரசு அரசியல் சாகசத்தை செய்வதாகவும், தாங்கள் அதை சட்டப்பூர்வமாக எதிர்த்துப் போராடுவோம் எனவும் கூறிய அவர், தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக தண்ணீர் தொடர்பான பிரச்சினை இருந்து வருகிறது. எங்கள் எல்லையிலுள்ள பகுதியில் நாங்கள் மேகதாது அணைக்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கியுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.