ஜூன் 20-ல் அமெரிக்கா, எகிப்து நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் 20 முதல் 25-ம் தேதி வரை 5 நாள் பயணமாக…

பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் 20 முதல் 25-ம் தேதி வரை 5 நாள் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்துக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிற்கு மோடியின் வருகை நியூயார்க்கில் தொடங்கவுள்ளது. வரும் ஜூன் 21-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.

பின்னர், ஜூன் 22-ம் தேதி வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்குச் சென்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து உரையாட உள்ளார். அதன் பின்னர், அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். தொடர்ந்து ஜூன் 23-ம் தேதி அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பில்ன்கள் ஆகியோருடன் மதிய உணவில் கலந்துகொள்கிறார்.

நிறைவாக ஜூன் 24 மற்றும் 25-ம் தேதி பிரதமர் மோடி எகிப்துக்கு செல்ல உள்ளார். அங்கு அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசியை சந்திக்க உள்ளார். பின்னர் எகிப்திய அரசை சேர்ந்த மூத்த தலைவர்களுடன் அவர் சந்தித்துப் பேச உள்ளார் என கூறப்பட்டுள்ளது. ஒரு பிரதமராக எகிப்துக்கு மோடி வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.