அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து இன்று அவர் கரூரில் செய்தியார்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழ் நாடு சட்டப்பேரவையில் தவெகவிற்கு ஆதரவளிக்க வலியுறுத்தினோம். அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து எடுத்து விட்டனர். கருத்து வேறுபாடுகள் தொடர்ந்ததால் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெகவில் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் இணைந்தேன்.
தொடர்ந்து முதலமைச்சர் விஜயை பனையூர் அலுவலகத்தில் சந்தித்தேன். நாங்கள் தவெக இணைந்து கரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற பாடுபடுவோம். முதல்வர் 10 ந் தேதி கரூர் வருகிறார். அங்கு அவர் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.




