கமல்ஹாசன் தயாரிப்பில் சிவாகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. தாய்கிழவி பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கும் இப்படத்தில் சிவாகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கிறார். மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் ‘சேயோன்’ திரைப்படத்தில் கன்னட சினிமாவை சேர்ந்த இயக்குநர் மற்றும் நடிகர் ராஜ் பி. ஷெட்டி இணைந்துள்ளார். இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள சிறப்பு போஸ்டரில் ராஜ் பி. ஷெட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.




