சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் : 41 மின்சார இரயில் சேவை ரத்து…!

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இருமார்கங்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 03.30 வரை 41 மின்சார இரயில் சேவை ரத்து செய்யபட்டுள்ளது

சென்னை – தாம்பரம் இடையே தினமும் 200க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இதில் வேலை செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் பயணிக்கின்றனர்.

இந்த நிலையில் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார இரயில் வழித்தடத்தில் இன்று மற்றும் வரும் 12 ஆகிய தேதிகளில் இரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனையிட்டி இன்று சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இருமார்கங்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 03.30 வரை 41 மின்சார இரயில் சேவை ரத்து செய்யபட்டுள்ளது.

அதே போல் திருமால்பூர் , அரக்கோணம் , செங்கல்பட்டு வரை இயக்கப்பட்ட புறநகர் மின்சார ரயில் சேவைகள் தாம்பரம் வரை மட்டுமே பகுதியாக இயக்கப்படுகிறது.

இந்த அறிவிப்பினை தொடர்ந்து, மாநகர் போக்குவரத்துக் கழகம், இன்று மற்றும் வரும் 12 ஆகிய நாட்களில், பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக சென்னை கடற்கரை இரயில் நிலையம் – தாம்பரம் வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 50 பேருந்துகளை மாநகர் போக்குவரத்துக் கழகம் இயக்க உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.