மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் #Modi நேரில் அஞ்சலி!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) திடீர் உடல்நலக் குறைவால் நேற்று (டிச.26) மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்​துவ​மனை​யில்…

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) திடீர் உடல்நலக் குறைவால் நேற்று (டிச.26) மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்​துவ​மனை​யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக மன்மோகன் சிங் நேற்று இரவு 9.51 மணியளவில் காலமானார்.

மன்மோகன் சிங்கின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், இன்று அதிகாலை மன்மோகன் சிங் உடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலிக்கு பின் மன்மோகன் சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் நாளை தகனம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், பிரதமர் மோடி, மன்மோகன் சிங்கின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.