முக்கியச் செய்திகள் தமிழகம்

இபிஎஸ், ஓபிஎஸை தனித்தனியாக சந்திக்க பிரதமர் மோடி மறுப்பு

சென்னை வரும் பிரதமர் மோடியை தனித்தனியாக சந்திக்க ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர். இதன்மூலம் தங்களது அணியை பிரதமர் அங்கீகரித்துவிட்டார் என்ற தோற்றம் உருவாகும் என இரு தரப்பினரும் கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இரு தரப்பையுமே தனித்தனியாக சந்திக்க பிரதமர் மோடி விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இன்று செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்காக சென்னை வரும் பிரதமர் மோடி இன்று இரவு ராஜ் பவனில் தங்குகிறார். சுமார் 7.30 மணியளவில் அவர் ராஜ்பவனுக்கு செல்வார் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதன் பின்னர் தமிழகத்தின் கூட்டணி கட்சித்தலைவர்கள், பாஜக நிர்வாகிகளை அவர் சந்திக்கவுள்ளார். மேலும் தமிழகத்தின் தொழிலதிபர்கள் சிலரையும் அவர் சந்திப்பார் என கூறப்படுகிறது. இந்தநிலையில் பிரதமர் மோடியை எப்படியாவது தனித்தனியாக சந்திக்க வேண்டும் என அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும் பகீரத முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக இரு தரப்பில் இருந்தும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மோடியின் இன்றைய சென்னை திட்டப்படி இன்று மாலை 4.45 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார். அப்போது அவரை வரவேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக அமைச்சர் துரைமுருகன் மற்றும் அரசு உயரதிகாரிகள் செல்கின்றனர். அதேபோல் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் செல்கின்றனர். கூட்டணி கட்சியான அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் செல்கின்றனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கு பெற மட்டுமே இபிஎஸிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு ஹெலிபேட் தளத்திற்குச் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கை செல்கிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவுக்குப் பிறகு, அவர் சாலை மார்க்கமாக ராஜ் பவனுக்குச் செல்கிறார்.  இன்று இரவு அங்கு தங்கும் அவர் பாஜக தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களை சந்திக்கிறார்.

அப்போது அதிமுகவில் தமக்கே முழு ஆதரவும் உள்ளது என்பதை நேரில் விளக்குவதற்காக இபிஎஸ் முயன்று வருகிறார். ஓபிஎஸை பொறுத்தவரை அதிமுகவில் சட்டவிதிகளுக்கு முரணாக பல்வேறு முடிவுகளை எடப்பாடி எடுத்துள்ளார் என்பதை விளக்க அவர் முயல்கிறார்.

ஏற்கனவே குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு பதவியேற்பு விழாவிற்கு சென்று இருந்த எடப்பாடி பழனிசாமி எப்படியாவது பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என எண்ணினார். ஆனால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து சரியான ரெஸ்பான்ஸ் இல்லாத காரணத்தினால் தமது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார். இந்தநிலையில் இம்முறையும் பிரதமரை சந்திக்க முடியவில்லை என்றால் தமது ஆதரவாளர்கள் சோர்வடைந்து விடுவர். மேலும் ஓபிஎஸ் பக்கம் செல்ல யோசிக்க தொடங்கி விடுவர் என்ற எண்ணம் எடப்பாடி தரப்பில் இருப்பதாக தெரிகிறது.

தாங்கள்தான் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்கள் என்பதை காட்டினால், விட்ட இடத்தை மீண்டும் எளிதில் பிடித்துவிடலாம் என ஓபிஎஸ் தரப்பு நம்புகிறது. இருவரும் இணைந்து வந்தால் மட்டுமே பிரதமர் மோடி அவர்களை சந்திப்பார் என்ற சூழல் தற்போது உருவாகியுள்ளது. இரு அணிகளாக அதிமுக உடைவதை மோடி விரும்பவில்லை என கூறப்படுகிறது. வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடியும், டெல்லிக்கு வழியனுப்பும் நிகழ்ச்சியில் ஓபிஎஸியும் கலந்து கொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சாலைகள் பெயர் மாற்றம்; தலைமைச் செயலாளரிடம் திமுக புகார்!

EZHILARASAN D

தாமிரபரணி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட 3 பழங்கால சிலைகள்: அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

Web Editor

சானிடைசர் பெயரில் சாராய விற்பனை ; 7 பேர் கைது

EZHILARASAN D