பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் விஜய் நன்றி…!

முதலமைச்சர் விஜய் தனக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி மற்றும் நாடாளுமன்ற எதிகட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டின் 13வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றார். நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் அவருக்கு மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதனை தொடர்ந்து அரசியல், சினிமா என பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய பிரதமர் மோடி மற்றும் நாடாளுமன்ற எதிகட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தனக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி மற்றும் நாடாளுமன்ற எதிகட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நான் முதலமைச்சராகப் பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி. எங்கள் மக்களின் நலனும் முன்னேற்றமுமே எங்களின் ஒரே நோக்கம். தமிழகத்தின் தொடர் வளர்ச்சிக்கு மத்திய அரசின் செயல்மிகு ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் மற்றொரு பதிவில் “எனது பதவியேற்பு விழாவில் நேரில் கலந்துகொண்டு சிறப்பித்த, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள். மக்களுக்குச் சேவையாற்றும் இந்தப் பயணத்தை நாங்கள் தொடங்கும் வேளையில், உங்கள் ஆதரவும் நல்வாழ்த்துகளும் பெரிதும் போற்றப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.