தமிழ்நாடு வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி – ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் சென்றார்!

தமிழ்நாடு வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி,  கல்பாக்கத்தில் அதிவேக ஈனுலை மின்உற்பத்தி திட்டத்தை தொடங்கி வைக்க ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் சென்றடைந்தார்.  தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி…

தமிழ்நாடு வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி,  கல்பாக்கத்தில் அதிவேக ஈனுலை மின்உற்பத்தி திட்டத்தை தொடங்கி வைக்க ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் சென்றடைந்தார். 

தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் சென்னை வந்தடைந்தார்.  அவரை அமைச்சர் காந்தி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் வரவேற்றனர்.  பின்னர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் ஹெலிபேடு மையத்திற்கு பிரதமர் சென்றார். கல்பாக்கத்தில் அதிவேக ஈனுலை மின்உற்பத்தி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பின்னர்,  கல்பாக்கத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் விமான நிலையம் வரும் பிரதமர் பின்னர் சாலை மார்க்கமாக நந்தனம் செல்கிறார்.  நந்தனத்தில் YMCA மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின்,  அங்கிருந்து கார் மூலம் விமான நிலையம் சென்று தெலங்கானா மாநிலம் செல்கிறார்.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் 15,000 போலீசார் கொண்ட ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  காவல் ஆணையர் உத்தரவுப்படி, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.