தமிழ் நாடு முதலமைச்சர் விஜய், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று அவர் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். மெட்ரோ ரயிலில் அவர் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து நந்தனம் வரை பயணம் செய்தார்.
தொடர்ந்து, அங்கிருந்து அவர் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்துக்குச் சென்றார். அங்கு முதலமைச்சர் ர் விஜய், அரசு அதிகாரிகளுடன் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
தொடர்ந்து அவர் போரூர் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து ஆளில்லா மெட்ரோ ரயிலில் பூந்தமல்லி வரை பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்யவுள்ளார். மேலும் அவர் மெட்ரோ திட்ட பணிகளையும் ஆய்வு செய்கிறார்.




