தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் கூறிவருகின்றனர். ஆளுநர் ஆர்.என்.ரவி, நீண்ட ஆளுடனும், ஆராக்கியத்துடனும் வாழ வேண்டும் என ட்வீட் செய்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோல் தேமுதிக தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, பாஜக மாநில தலைவர் அண்ணாலை, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதேபோல் நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக தொடர்புக் கொண்டு, தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த இந்தியப் பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
இதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். வாழ்த்து தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது நன்றியினை தெரிவித்தார்.