ஆஸி அபாரம்… இந்திய அணி 109 ரன்களுக்கு சுருண்டது!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தன் முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடந்து…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தன் முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் ஏற்கனவே இந்திய அணி 2-0 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. கே.எல் ராகுலுக்கு பதிலாக சுப்மன் கில்லும், முகமது சமிக்கு பதிலாக உமேஷ் யாதவும் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இதையும் படிக்க: பார்டர் கவாஸ்கர் கோப்பை 3வது டெஸ்ட்; இந்தியா பேட்டிங் தேர்வு

தொடக்கம் முதலே இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆஸ்திரேலிய அணியின் சுழல் பந்துவீச்சு இன்று அபாரமாக இருந்தது. இதையடுத்து இந்திய அணி தன் முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்களும், கில் 21 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மேத்திவ் குனிமன் 5 விக்கெட்களையும், நாதன் லயன் 3 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் முதலில் தர்மசாலா மைதானத்தில் நடத்தத் திட்டமிட்டு, பிறகு இந்தூருக்கு மாற்றப்பட்ட குறிப்பிடத்தக்கது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.