நான் உண்மையின் பக்கம் நிற்பவன் எனவே என்னே போலீசை அனுப்பி அச்சுறுத்த முடியாது என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேரளாவில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். அங்கு அவர் தனது சொந்த தொகுதியான வயநாட்டிற்க்கு சென்றார். அங்கு புதிதாக கட்டப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்கவும்: மகளிர் பிரீமியர் லீக் போட்டி; டெல்லி அணி அபார வெற்றி!
தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் என்றால் இந்தியா என்று அர்த்தம் அல்ல. பிரதமரையோ, அரசையோ விமர்சிப்பது எந்த வகையிலும் இந்தியா மீதான தாக்குதல் அல்ல. எது நடந்தாலும் உண்மையை பேசுவேன், அதற்காக போராடுவேன்.
The Prime Minister is not India!
In no way is the criticism of the PM or the Govt an 'attack on India'!
I will speak the truth, and fight for it, come what may. pic.twitter.com/2Mkg0BgpZD
— Rahul Gandhi (@RahulGandhi) March 20, 2023
எத்தனையோ பேர், பிரதமர், பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்., போலீஸ் ஆகியோரைப் பார்த்து பயப்படலாம். ஆனால் நான் சிறிது கூட பயப்பட மாட்டேன். நான் பயப்படாதது தான் அவர்களுக்கு பிரச்சினை. ஏனென்றால் நான் உண்மையின் மீது நம்பிக்கை உள்ளவன்.
நான் எவ்வளவு முறை தாக்கப்பட்டாலும், என் வீட்டுக்கு எத்தனை முறை போலீஸ் வந்தாலும், என் மீது எத்தனை வழக்குகள் போடப்பட்டாலும் எனக்கு பயம் கிடையாது. என்னை யாரும் அச்சுறுத்த முடியாது. நான் எப்போதும் உண்மையின் பக்கம் நிற்பேன் என அவர் கூறினார்.