முக்கியச் செய்திகள் விளையாட்டு

மகளிர் பிரீமியர் லீக் போட்டி; டெல்லி அணி அபார வெற்றி!

மகளிர் பிரீமியர் லீக் போட்டி பிளே ஆப் சுற்றில் டெல்லி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. பிளே ஆப் சுற்றில் குஜராத்தை வீழ்த்தி உ.பி. அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இதையடுத்து நேற்று நடைபெற்ற 2வது பிளே ஆப் ஆட்டத்தில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யாஷ்டிகா பாடியா மற்றும் மேத்யூஸ் ஆகியோர் களமிறங்கினர். இதில் யாஷ்டிகா பாடியா, மேத்யூஸ் , நாட் ஸ்கிவர்-பிரண்ட் ஆகியோர் சொற்ப ரன்கள் எடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இதையடுத்து கேப்டன் ஹர்மன்பிரீத் மற்றும் அமெலியா கெர் ஆகியோர் இணைந்தனர். இதில் அமெலியா கெர்ரும் 8 ரன்னில் வீழ்ந்தார். பூஜா வஸ்த்ரகர், கேப்டன் ஹர்மன்பிரீத்துடன் ஜோடி சேர்ந்தார்.

இதையும் படிக்கவும்: ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஏற்றவாறு விளக்குகளை ஒளிர செய்த டெஸ்லா கார்கள்; இணையத்தில் வைரலாகும் வீடியோ

இதில் அதிரடியாக ஆடிய பூஜா வஸ்த்ரகரால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அவர் 19 பந்தில் 26 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் சேர்த்தது.110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. அதிரடியான ஆட்டத்தை டெல்லி அணி வெளிப்படுத்தியது. அந்த அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆலிஸ் கேப்சி 5 சிக்ஸர்கள், 1 பவுண்டரி அடித்து 38 ரன்கள் எடுத்தார். ஷபாலி வர்மா 33 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் மெக் லேனிங் 32 ரன்கள் எடுத்தார். இறுதியில் டெல்லி அணி 9 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பில் அபார வெற்றி பெற்றது.

9 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. ஷபாலி வர்மா 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் கேப்டன் மெக் லேனிங் (32 ரன்கள்), சிக்சர் மழை பொழிந்த ஆலிஸ் கேப்சி (38 ரன்கள், 5 சிக்சர்கள், 1 பவுண்டரி) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை உறுதி செய்தனர். இதனால் டெல்லி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ரன்ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் மும்பையை பின்னுக்குத் தள்ளி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடத்தை பிடித்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கோகுல்ராஜ் கொலை வழக்கு : யுவராஜ் கோவை மத்திய சிறைக்கு மாற்றம்

Halley Karthik

இரட்டை கொலை, 1,000 சவரன் நகை கொள்ளை – குற்றவாளி சிக்கியது எப்படி?

G SaravanaKumar

17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Halley Karthik