முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

விக்னேஷ் சிவனுக்கு காதல் மனைவி நயன்தாரா கொடுத்த பிறந்தநாள் சர்ப்ரைஸ்!

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் புர்ஜ் கலிஃபாவிற்கு கீழே கொண்டாடியுள்ளார்.

 

இயக்குநர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிகள், திருமணத்திற்கு பிறகு வெளிநாடுகளில் சுற்றுபயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்று தனது 37-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் அவருக்கு ரசிகர்கள், திரையுலகைச் சேர்ந்த பலரும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

மேலும் நயன்தாராவை திருமணம் செய்து கொண்ட பிறகு கொண்டாடப்படும் முதல் பிறந்தநாள் என்பதால் அவரது பிறந்த நாள் மீது எதிர்ப்பார்ப்பு இருந்து வந்தது. இதனிடையே, தனது காதல் கணவர் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா பிறந்த நாள் பரிசு கொடுப்பதற்கு முடிவு செய்துள்ளார். அதனை பிரம்மாண்டமாக அமைக்க வேண்டும் என யோசித்த அவர், புகழ் பெற்ற புர்ஜ் கலிஃபாவிற்கு கீழே பிறந்த நாள் விழாவிற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.


விக்னேஷ் சிவன் மற்றும் குடும்பத்தினருடன் புர்ஜ் கலிஃபாவிற்கு கீழே நேற்று நள்ளிரவு அவர்கள் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். மனைவியின் சர்ப்ரைசால் திகைத்த விக்னேஷ் சிவன் இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில், அன்பான குடும்பத்தினரோடு பிறந்தநாள் கொண்டாடுகிறேன். என் மனைவியால் கிடைத்த மிகப்பெரிய சர்ப்ரைஸ். புர்ஜ் கலிஃபாவிற்கு கீழே எனது அன்பான உறவுகளோடு நடந்த ஒரு கனவு பிறந்தநாள். இதை விட சிறப்பாக பெற முடியாது என குறிப்பிட்டுள்ளார். இந்த ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையில் எனக்குக் கொடுக்கும் அனைத்து அழகான தருணங்களுக்கும் எப்போதும் கடவுளுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.


விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி எப்போதுமே பேசப்பட்டு வரும் நிலையில், அவர்கள் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

– காயத்ரிவேல்முருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“எனது சேவைகளும் போராட்டங்களும் மக்களை சென்றடயவில்லை”

Gayathri Venkatesan

திமுக-வில் சீனியர்கள் அதிருப்தியில் உள்ளனர் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்

EZHILARASAN D

திருடிய இரு சக்கர வாகனத்திலேயே ஊர் சுற்றிய இளைஞரை கைது செய்தது காவல் துறை

Web Editor