பயங்கரவாதத்தின் ஆதாரமாக ஆப்கானிஸ்தான் மாறிவிடக்கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் குறித்த ஜி20 நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திரமோடி, காணொலி வாயிலாக பங்கேற்றார். கூட்டத்தில் பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தானில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய நிர்வாகம் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தின் ஆதாரமாக ஆப்கானிஸ்தான் மாறிவிடக்கூடாது என்றும், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தங்கு தடையின்றி வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் சர்வதேச சமூகம் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்கொள்ளும் ஆப்கானிஸ்தான் மக்களின் வலியை ஒவ்வொரு இந்தியரும் உணர்வதாகவும் உடனடியாக ஆப்கன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி கிடைப்பதைச் சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் அடைந்த சமூக பொருளாதார முன்னேற்றம் நீடிக்க வேண்டுமெனில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய நிர்வாகம் அவசியம் எனவும் அவர் மாநாட்டில் வலியுறுத்தினார்.








