முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று தொடங்கி வரும் 16 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழையும் சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பிருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழையும் ஈரோடு, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழையும் ஏனைய வடமாவட்டங்கள், புதுச்சேரியில் சில இடங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானதுவ ரை இன்று மழைப் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று நள்ளிரவு உருவாகும் என்று கூறப்பட்டிருந்தது. அது அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை உருவாக வாய்ப்புள்ளது.

Advertisement:
SHARE

Related posts

அக்னி தீர்த்தக்கடலில் இறங்கி மார்க்சிஸ்ட்டுகள் ஆர்ப்பாட்டம்!

Saravana

“ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா மருந்து எப்போது சந்தைக்கு வரும்?”

Gayathri Venkatesan

டெல்லி பயண சர்ச்சை; இபிஎஸ்ஸை சந்தித்த ராஜேந்திரபாலாஜி

Saravana Kumar