முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை வந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத் திறப்பு விழாவில் பங்கேற்க, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தடைந்தார்.

தமிழ்நாட்டில் 1921ல் மேலவை என்றழைக்கப்படும் சட்டமன்ற கவுன்சில் அமைக்கப்பட்டது. இதன் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா வும், சட்டமன்ற அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்பட திறப்பு விழாவும் இன்று நடைபெறுகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற கூட்ட அரங்கில், ஆளுநர் பன்வாரி லால் புரோகித் தலைமையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இந்த விழா நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் தலைமை விருந்தினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார். விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று 12.40 மணியளவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தடைந் தார். விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.

குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தலைமைச் செயலக வளாகம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தலைமைச் செயலக வாயிலின் இருபுறமும் வாழைத்தோரணம் கட்டி பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

Advertisement:
SHARE

Related posts

’இருபால் செவிலியர்களுக்கும் நன்றி கலந்த செவிலியர் தின வாழ்த்துகள்’: முதல்வர் ஸ்டாலின்

Halley Karthik

தடுப்பூசி தட்டுப்பாட்டை மத்திய அரசு உணர்ந்துள்ளது – டி.ஆர்.பாலு

Gayathri Venkatesan

கடலில் படகு மூழ்கி தத்தளித்த மீனவர்கள் மீட்பு

Ezhilarasan