900 குடும்பத்தினரின் பெயரை மகள் திருமண அழைப்பிதழில் அச்சடித்த ஊராட்சி மன்ற தலைவரின் செயல் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த மல்லபுரம் ஊராட்சி மன்ற தலைவராக ரமேஷ் உள்ளார். இவரது ஊராட்சியில் மல்லபுரம், கச்சுகட்டு, திருமலைராஜபுரம், கீழ திருமலைராஜபுரம், வில்வேளங்குடி ஆகிய 5 கிராமங்களில் உள்ளடக்கி 900 குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில், இவரது மகள் ஷாலினி – கைலாஷ் திருமண விழா நாளை(24.6.2022) நடைபெற உள்ளது. இதற்காகத் தனது ஊராட்சி பகுதியில் வசித்து வரும் 900 குடும்பத்தினருக்கும் வீடு வீடாகச் சென்று தனது மகளின் திருமண அழைப்பிதழ் கொடுத்து வருகிறார். அதில் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில், தனது மகள் திருமண அழைப்பிதழில், 900 குடும்பத்தின் தலைவர் மற்றும் தலைவி பெயர்களை தங்கள் நல்வரவை விரும்பும் உறவினர்கள் என அனைவரின் பெயரையும் அச்சடித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸில் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது ஏன்?’
அழைப்பிதழ்களில் உறவினர்கள் பெயர் போடுவதற்கு யோசிக்கும் இந்த காலகட்டத்தில், ஜாதி, மதம், கட்சி என எவ்வித பாகுபாடின்றி ஊர் மக்கள் அனைவரின் பெயர்களையும், குடும்ப அழைப்பிதழில் அச்சடித்துள்ளேன். இது அனைவரும் ஒரே குடும்பம் என்ற
மகிழ்ச்சியைத் தருகிறது என மகிழ்ச்சி பொங்க அவர் தெரிவிக்கிறார். மல்லபுரம் ஊராட்சி மன்ற தலைவராக ரமேஷின் இந்த செயல் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.