ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கருட மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை மாதந்தோறும் உண்டியலைத் திறந்து எண்ணுவது வழக்கம். இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று கருட மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸில் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது ஏன்?’
உண்டியலில் பக்தர்கள் வழங்கிய ரூபாய் 64,45,942 ரூபாயும், தங்கம் 148 கிராமும், வெள்ளி 990 கிராமும் மற்றும் வெளிநாட்டுப் பணம் 233 நோட்டுகளும் இருந்ததாகவும், இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர் என ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தகவல் தெரிவித்துள்ளார்.