முக்கியச் செய்திகள் இந்தியா

அபயா கொலை வழக்கு; குற்றாவளிகளுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி அபாய என்பவர் கடந்த 1992ம் ஆண்டு மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்தார். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வந்த பாதியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் பூத்ருக்கயில் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகிய இந்த மூவரின் தகாத உறவு அபாயவிற்கு தெரியவந்ததால் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அபயா கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் குற்றாவாளிகள் என உறுதி செய்து ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாதியார் ஜோஸ் பூத்ருக்கயில் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, குற்றவாளிகள் தரப்பில் ஆயுள் தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றம் கன்னியாஸ்திரி செபி ஆகியோரின் ஆயுள் தண்டணையை நிறுத்தி வைத்து, ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவில், பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் தலா ரூ.5 லட்சத்துக்கான ஜாமீன் பத்திரத்தை வழங்க வேண்டும், வேறு எந்த குற்றச்செயலிலும் ஈடுபட கூடாது எனவும், அடுத்த 6 மாதத்திற்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும், நீதிமன்ற அனுமதியின்றி மாநிலத்தை விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனைகளையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இலங்கைக்கு உதவி – இந்தியாவை புகழ்ந்த சீனா

Mohan Dass

மோகன் ஜி இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் செல்வராகவன்

Arivazhagan CM

தமிழ்நாட்டில் கொரோனா நிலவரம்

Web Editor