ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸில் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது ஏன்?

அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் இன்று மிகப் பிரமாணமாக நடைபெற்றது. இந்நிகழ்வு ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ்ல் நடத்தப்பட்டது. அந்த மண்டபத்தின் சிறப்புகள் பற்றி விளக்குகிறது இந்தச் செய்தி தொகுப்பு. அதிமுகவின் பொதுக்குழு பல ஆண்டுகளாக…

அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் இன்று மிகப் பிரமாணமாக நடைபெற்றது. இந்நிகழ்வு ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ்ல் நடத்தப்பட்டது. அந்த மண்டபத்தின் சிறப்புகள் பற்றி விளக்குகிறது இந்தச் செய்தி தொகுப்பு.

அதிமுகவின் பொதுக்குழு பல ஆண்டுகளாக வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தெய்வ பக்தி மிக்கவர், அதனால் தான் திருப்பதி பெருமாளின் பெயரை உடைய மண்டபத்தைத் தேர்ந்தெடுக்கிறார் எனச் சொல்லப்பட்டது. ஆனால், காரணம் அதுமட்டுமில்லை என்கின்றனர்..? என்ன அது என்பதனை தெரிந்துகொள்ள சற்று பின்னோக்கி பார்க்கலாம்.

1972-ஆம் ஆண்டு அதிமுக வை துவக்கிய எம்ஜிஆர், அதிமுக கட்சிக்காகத் தனி அலுவலகம் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்காக அவர், சென்னையின் பல இடங்களில் இடம் தேடினார். ஆனால், எதுவும் அவர் நினைத்தது போல் சரியாக அமையவில்லை. பிறகு ராயப்பேட்டையில் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள வீட்டையே அதிமுகவின் அலுவலகமாக மாற்றினார் (ஒருகாலத்தில், அவரின் அம்மா மற்றும் அண்ணனுடன் வாழ்ந்த வீடு). எம்ஜிஆர் இருந்த வரை, அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் அதிமுகவின் தலைமை அலுவலகத்திலும், கட்சி அலுவலகத்திற்கு அருகில் உள்ள ஹேமமாலினி திருமண மண்டபம், அடையாறில் உள்ள சத்யா ஸ்டூடியோவிலும் நடைபெற்று வந்தது. எம்ஜிஆர் மறைவுக்குப் பின் பொதுச்செயலாளரான ஜெயலலிதாவும் , அதே இடத்திலே பொதுக்குழுவை நடத்தினார். பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள், அதிக அளவில் கட்சியினரைப்போல் , வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து , அதிமுக பொதுக்குழு நடைபெறும் பகுதியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் உண்டானது.

அண்மைச் செய்தி: ‘பட்டாசு ஆலை வெடி விபத்து; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு’

ஒரு கட்டத்தில் அதிமுக கூட்டம் விஜய சேஷ மகால், விஜயா மஹால் போன்ற இடங்களில் நடைபெற்றது. அங்கும் இடம் பற்றாக்குறை ஏற்பட்டது. பிறகு ஜெயலலிதாவின் பரிந்துரையையடுத்து, சென்னை மாகர பகுதிக்கு வெளியே தனி இடம் தேடப்பட்டது. அதிக போக்குவரத்து நெரிசல் இல்லாததாகவும், அதிக அளவில் வாகன நிறுத்துமிடங்கள் கொண்ட பிரம்மாண்ட அரங்கம் கொண்டதாகவும் உள்ள, வானகரம், ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபம் அதிமுக பொதுக்குழுவை நடத்தத் தேர்வு செய்யப்பட்டது. முதல் முறையாக மட்டுமின்றி தொடர்ச்சியாக சுமார் 20 ஆண்டுகளாக அதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஸ்ரீ வாரி பேலசில்தான் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.