உக்ரைனில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள்!

பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஸ்கால்ஸ், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, ரோமானியா அதிபர் கிளாஸ் லோஹன்னிஸ் ஆகியோரும் ஜெலன்ஸ்கியை சந்திப்பதற்காக உக்ரைன் வந்தனர். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர்…

பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஸ்கால்ஸ், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, ரோமானியா அதிபர் கிளாஸ் லோஹன்னிஸ் ஆகியோரும் ஜெலன்ஸ்கியை சந்திப்பதற்காக உக்ரைன் வந்தனர்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து 100 நாட்களை கடந்து விட்டது. சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியும் விட்டது. இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ரோமானியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் அந்நாட்டுக்கு இன்று சென்றனர்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் அலுவலம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “உக்ரைன் தலைநகர் கிவிவில் ஐரோப்பிய கண்டத்தின் முக்கியத் தலைவர் உள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக தங்கள் நாட்டை சேர்க்குமாறு உக்ரைன் கோரியுள்ள நிலையில், இந்தத் தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
முன்னதாக, போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு அதிக நிதியுதவி அளிக்கப்படும் என்று ஜெர்மனி தெரிவித்திருந்தது. அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் அதிக ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கி வருகிறது.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.