டெல்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அதிஷி, செளரப் பரத்வாஜ் ஆகியோரை புதிய அமைச்சர்களாக குடியரசு தலைவர் நியமனம் செய்துள்ளார். இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் அந்த மாநில முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சிபிஐ அதிகாரிகளால் கடந்த பிப்ரவரி 26ம் தேதி கைது செய்யப்பட்டார். டெல்லி சிபிஐ ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 5 நாட்கள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டார். பிறகு தனது அமைச்சர் பதவியையும் துணை முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதுமட்டுமல்லாமல் சுகாதார துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயினும் பணமோசடி வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு மே 30-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரும் தனது பதவியை கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார். இந்நிலையில் டெல்லி மாநில அரசில் இரு அமைச்சர்கள் இடம் காலியானது.
அண்மைச் செய்தி : ”மணீஷ் சிசோடியா அரசியல் காரணங்களுக்காக குறிவைக்கப்படுகிறார்” – பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்
இதனையடுத்து காலியாக உள்ள இரண்டு பதவிகளுக்கும் புதிய அமைச்சர்களை நியமனம் செய்யும் பணி நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அதிஷி மற்றும் சௌரப் பரத்வாஜ் ஆகியோரின் பெயர்களை டெல்லி அமைச்சரவை பரிந்துரை செய்தது. பரிந்துரையை ஏற்ற குடியரசுத்தலைவர் இருவரையும் அமைச்சர்களாக நியமனம் செய்துள்ளார். இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.