சீனாவின் அச்சுறுத்தலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் புரிந்து கொள்ளவில்லை என ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல்காந்தி இங்கிலாந்து பயணம் செய்துள்ளார். அங்கு மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என்று பல்வேறு தரப்பினரிடம் உரையாடி வருகிறார். “இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனாவின் அச்சுறுத்தலை புரிந்துகொள்ளவில்லை. இந்தியா – அமெரிக்கா நட்பை சீனா விரும்பவில்லை. அந்த நட்பு தொடர்ந்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்ற ரீதியில்தான் லடாக் மற்றும் அருணாசலபிரதேசத்தில் தங்கள் படைகளை நிறுத்தியுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்க: ”மணீஷ் சிசோடியா அரசியல் காரணங்களுக்காக குறிவைக்கப்படுகிறார்” – பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்
இந்திய எல்லைக்குள் யாரும் நுழையவில்லை என பிரதமர் சொல்வது அப்படி செய்யலாம் என அவர்களுக்கு விடுக்கும் அழைப்பாகும்.” என்றவர், சீனா குறித்து பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராகுல், “இந்தியாவின் 2,000 சதுர கி.மீ நிலப்பரப்பு சீன ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது.
எல்லையில் சீனர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை உற்று கவனிக்க வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் அரசு ஒரு துரும்பைக் கூட கிள்ளி போடவில்லை. இந்திய எல்லைக்குள் யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்பது காங்கிரஸின் கொள்கை. இந்திய வெளியுறவுக் கொள்கையில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரத்தில் சீனா விவகாரத்தில் ஆபத்து இருப்பதாகவே உணர்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
-ம.பவித்ரா